• Jul 11 2026

பாரதிராஜா குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கா.? பல நாட்கள் கழித்து வெளியான உண்மை.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அவரது குடும்பத்தைச் சுற்றி பல்வேறு வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கின. குறிப்பாக சொத்து பிரச்சனை காரணமாக குடும்பத்தினருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறுகையில், “எந்தவித சொத்து பிரச்சனையும் குடும்பத்தில் இல்லை. அண்ணன் உயிருடன் இருந்தபோதே அனைத்து சொத்துகளையும் முறையாக பிரித்து எழுதி வைத்துவிட்டார். 

மகளுக்கு ஒரு பங்கு, மனைவிக்கு ஒரு பங்கு, மருமகளுக்கு ஒரு பங்கு என அனைவருக்கும் தெளிவாக உரிமைகளை வழங்கியிருந்தார். அதனால் சொத்து தொடர்பாக எந்த குழப்பமும் ஏற்பட வாய்ப்பே இல்லை.” என்று தெரிவித்தார்.

மேலும், பாரதிராஜாவின் மறைவின் போது ஏற்பட்ட ஒரு சிறிய குடும்ப சூழ்நிலையை சிலர் தவறாக புரிந்துகொண்டு பெரிதுபடுத்தியதாகவும் அவர் கூறினார். “நந்தனாவின் பெற்றோர் தாமதமாக வந்ததால், சீக்கிரம் வந்திருக்க வேண்டும் என ஜனனி கூறிய சிறிய வாக்குவாதத்தை சிலர் சொத்து தகராறு என மாற்றி பரப்பிவிட்டார்கள். உண்மையில் அது சாதாரண குடும்ப உரையாடல் மட்டுமே....” என ஜெயராஜ் விளக்கமளித்தார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் பாரதிராஜா குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருப்பதாக பரவிய தகவல்கள் வெறும் வதந்தி என்பதும் தெளிவாகியுள்ளது. ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இந்த விளக்கத்தை வரவேற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement