• Aug 25 2026

சரவணனைப் பார்த்து கதறி அழுத பாண்டியன்.. காலையிலேயே வெடித்த புதுப் பிரச்சனை.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சக்திவேல் குமாருக்கு பொண்ணு பார்க்க போறேன் என்று சொன்னதைக் கேட்ட சுகன்யா வெளில எல்லாம் எதுக்காக போய் பொண்ணைப் பார்த்துக்கிட்டு அதுதான் சொந்த அத்தைப் பொண்ணு இருக்கே அவளையே கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட சக்திவேல் கோபமாக உனக்கு வேற பொண்ணே கிடையாதா என்று கேட்கிறார்.

பின் சக்திவேல் குமாரைப் பார்த்து என்ட பையனுக்கு பெரிய இடத்தில பொண்ணைப் பார்த்து நான் கட்டிவைக்கிறேன் என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து சரவணன், கதிர் எல்லாரும் ஒன்னா இருந்து குடிச்சிட்டு வீட்டுக்கு வெளியே நிற்கிறார்கள். அந்த நேரம் பார்த்து பாண்டியன் அங்க வந்து எதுக்காக எல்லாரும் வெளியில நிற்கிறீங்க என்று கேட்கிறார்.


அதுக்கு கதிர் எதையோ சொல்லி சமாளிக்கிறார். பின் பாண்டியன் தனிய வெளியில நின்று சரவணனுக்கு கல்யாணம் நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனையடுத்து பாண்டியன் பழனியை பார்த்து சரவணன் விஷயத்தில நான் பெரிய தப்பு பண்ணிட்டன் என்று சொல்லுறார். 

அதைக் கேட்ட பழனி எல்லாத்தையும் பார்த்துக்கலாம் மச்சான் பேசாமல் தூங்குங்க என்று சொல்லுறார். மறுநாள் காலையில பாண்டியன் சரவணனைப் பார்த்து உனக்கு என்மேல கோபம் ஏதும் இருக்கா என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement