• May 15 2026

இசைஞானி இளையராஜாவுக்கு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.  இதில் சிம்ரன் கேமியா ரோலில் நடித்திருந்தார்.  தல ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.  இதன் வெற்றியை தொடர்ந்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் காம்போ மீண்டும் இணைய  உள்ளது. 

இதைத்தொடர்ந்து அஜித்குமாரின் ஏகே 64 படம் தொடர்பான அறிவிப்புகளுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.  இதற்கு இடையில்  அஜித் இறுதியாக நடித்த குட் பேட் அக்லி படம் தொடர்பான சர்ச்சை விரிசல் அடைந்துள்ளது.

குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த வழக்குத் தொடர்பான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. 


மேலும் குட் பேட் அக்லி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து  திடீரென நீக்கப்பட்டுள்ளது.  அதில் தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தொடர்ந்துள்ள காப்பிரைட்ஸ் வழக்கு காரணமாகவே ஓடிடி தளத்தில் இருந்து இந்த படம் நீக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த  தடையை நீக்க கோரி, பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, எதிர்வரும் 24 ஆம் தேதி இளையராஜா பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisement

Advertisement