கூமாபட்டி என்ற தனது கிராமத்தை சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தியதன் மூலம் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி பிரபலமானவர்தான் கூமாபட்டி தங்கராஜ். இவர் அதிகமாக பயன்படுத்திய ஏங்க.. என்ற வசனம் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரபலமான தங்கராஜ், பிரபல நகைக்கடை விளம்பரங்களில் நடித்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இவருடைய பேச்சு, ஆக்சன், ஆக்டிவிட்டீஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டும் இல்லாமல் தான் அதிகமாக புத்தகம் வாசிப்பதாகவும் சில புத்தகங்களை ரசிகர்களுக்கும் பரிந்துரைக்கவும் செய்தார்.

இவர் சின்னத்திரை பிரபலமான சாந்தினி பிரகாஷ் உடன் இணைந்து சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதன் பின்பு இருவரும் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில், கூமாபட்டி தங்கராஜ் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது கூமாபட்டி தங்கராஜ்க்கு எதிர்பாராத விதமாக கையில் ஏற்பட்ட விபத்தினால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கூறப்பட்டது. ஆனாலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் இந்த நிகழ்ச்சியில் தங்கராஜ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!