நடிகர் அஜித், தனது ரசிகர்களின் மனதில் எப்போதும் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். தனது திரைப்படங்களால் மட்டுமல்ல, ரசிகர்களிடம் காட்டும் நேர்மை மற்றும் ஸ்டைலான நடத்தை காரணமாகவும், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தைக் கொண்டுள்ளார்.

சமீபத்தில், அவர் மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸிங் போட்டியில் பங்கேற்ற போது ஏற்பட்ட ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட் திடலில் நடந்த 24H சீரிஸ் கார் ரேஸிங், உலகத்தரம் வாய்ந்த போட்டிகளின் ஒன்று. இதில், பல முன்னணி பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அஜித் கலந்து கொண்டு, தனது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளார்.

அஜித் தலைமையில் பங்கேற்ற அணி GT3 பிரிவில் சிறப்பான பங்கேற்பை பதிவு செய்துள்ளது. ரசிகர்களுக்காக மட்டுமல்ல, அணியினருக்கும் பெரும் உத்வேகம் அளித்த அவர், போட்டியின் போது தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கார் ரேஸிங் போட்டி நடக்கும்போது, ரசிகர்களுக்கு அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு இளம் பெண், அஜித்தை எதிர்பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்தாள். அஜித், அந்த பெண்ணை ஸ்டைலாக அணுகி, கை கொடுத்து விட்டு சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Fan girl moment 🤩 that girl's reaction says it all 😂😂#AjithKumar #AjithKumarRacing pic.twitter.com/kNvyjLcGZo
Listen News!