• May 22 2025

"டூரிஸ்ட் பாமிலி" படத்தைப் பாராட்டிய முக்கிய பிரபலம்..! என்ன சொல்லியிருக்கார் தெரியுமா..?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பில் உருவான "டூரிஸ்ட் பாமிலி" திரைப்படம், திரையரங்குகளில் வெளியானவுடன் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து லைகா தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் தமிழ் குமரன் வெளியிட்ட பாராட்டு வார்த்தைகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

லைகா நிறுவனத்தின் தலைவர் தமிழ் குமரன் கூறியதாவது, “டூரிஸ்ட் பாமிலி” என்னை மிகவும் ஈர்த்தது மட்டுமல்லாமல், மனதையும் நெகிழ்ச்சியடைய வைத்திருந்தது. குடும்பக் கதையையும், சமூக உணர்வையும் மிக அழகாக கலந்துரையாடியிருக்கிறார் இயக்குநர் அபிஷன் என்றதுடன் இவர் தனது முதல் படத்தில் இப்படியொரு சிறப்பான படைப்பை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.” என்றார்.


அவர் மேலும், “சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகிபாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சிம்ரனின் கதாப்பாத்திரம் திரைப்படத்தின் கதையை உயர்த்தியுள்ளது.” என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இப்படத்தின் மூலம் இயக்குநர் அபிஷன் தன் இயக்கத்துறையில் முதல் அடியை வைத்துள்ளார். ஆனால் அந்த ஒரு அடியே தமிழ்த்திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. திரைப்படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகிய மூன்றும் ஒரு தெளிவான அழுத்தத்தை தருகின்றன. எனவும் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement