சமூக ஊடகங்கள் இன்று திரை நட்சத்திரங்களின் வெளிப்பாட்டுத் தளமாக மாறியுள்ளன. தற்பொழுது, புதிய பாடலோ, டிரெண்டிங் இசையோ வந்தால் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் நடனம் ஆடி ரசிகர்களுடன் உறவாடுவது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில், பிரபல தமிழ் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றது.
ரேஷ்மா பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்திருந்தார். அத்துடன், "பிக்பாஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் தன்னை ஒரே நாளில் பிரபலமாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படத்தின் பாடலான "ஆத்தி சந்தன கட்ட" தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்தப் பாடலுக்கு, "கார்த்திகை தீபம்" சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி செம குத்தாட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியானதிலிருந்து ரேஷ்மாவிற்கு பாராட்டுக்கள் அதிகமாக கிடைத்து வருகின்றது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், சீரியல் பிரபலங்களும், சில திரைப்பட பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
'கார்த்திகை தீபம்' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் உறைந்துள்ள ரேஷ்மா பசுபுலேட்டி, 'ரெட்ரோ' பட பாடலுக்கு ஆடிய ரீல்ஸ் மூலம் மீண்டும் ஒரு முறை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள், சின்னத்திரை ரசிகர்கள் என அனைவரும் இவரது எளிமையான நடனத்தை ரசிக்கின்றனர்.
Listen News!