அஜித் கடந்த வருடம் நடித்த இரண்டு படங்கள் தான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இதில் ஒரு படம் கடந்த 6 ஆம் திகதி வெளியாகியது. முதல் நாள் நல்ல வசூலை சம்பாதித்திருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சரிவை சந்தித்துள்ளது.
இதனால் லைகா நிறுவனத்திற்கு 200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இந்த படம் பாரிய தோல்வி அடைந்து விடுமோ என்கின்ற அச்சம் ஒரு பக்கம் இருக்க அடுத்து வெளியாகவுள்ள அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு இந்த திரைப்படம் அச்சுறுத்தலாக அமையும் என தற்போது ஒரு சில செய்திகள் வெளியாகி வருகின்றது.
எனினும் குட் பேட் அக்லி படத்தினை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளமையினால் இந்த படம் எதிர்பார்ப்பதை விட மிகவும் பிரமாண்டமாக அமையலாம் எனவும் சொல்லப்படுகின்றது.மற்றும் இத் திரைப்படமானது ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!