• Jan 18 2025

சம்திங் சம்திங் படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த நடிகை கீதா யார் தெரியுமா?- இவருக்கு ரஜினியுடன் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் கீதா. இவர் குறித்து தான் தற்பொழுது பார்ப்போம்.

இவருடைய இயற்பெயர் கீதா கடம்பி இவங்க 1962ம் ஆண்டு ஜுலை மாதம் 14ம் திகதி கர்னாடகாவில் பிறந்திருக்கிறார்.1978ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பைரவி என்னும் திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினார்.


இப்படத்தில் தான் ரஜினியும் கதாநாயகனாக அறிமுகமாகினார். இதனால் இப்படம் கீதாவுக்கு மட்டுமல்ல ரஜினிக்கும் முக்கிய திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் பைரவி என்னும் கதாப்பாத்திரத்தில் தான் நடித்தாராம். இப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு வெறும் 12 வயது தானாம்.இப்படம்  இருவருடைய கெரியரிலும் முக்கியமானது என்பதால் இன்று வரை ரஜினியுடன் நல்ல உறவில் இருந்து வருகின்றாரம்.

இவரை ரஜினிகாந்தும் தங்கை என்று தான் அழைப்பாராம்.மேலும் பைரவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது படிப்பை நிறுத்தி விட்டு முழு நேரமும் நடிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தாராம். அதன்படி தன்னுடைய தாய் மொழியான கன்னட சினிமாவில் தான் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தாராம்.


பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாகவும் உயர்ந்தாராம். இவருக்கு மலையாளம் மற்றும் கன்னடத்திரைப்படங்கள் நிறைய விருதுகளையும் மற்றும் புகழையும் வெற்றியையும் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாம்.இது தவிர சீரியல்களிலும் நடித்திருக்கின்றாராம்.

இவர் 1997ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான வசந்த் என்பவரைத் திருமணம் செய்திருந்ததோடு அங்கேயே செட்டில் ஆகியும் விட்டாராம்.இவருக்கு 1999ம் அண்டு ஒரு மகனும் பிறந்திருக்கின்றார்.சினிமாவை விட்டு போன இவர் 2003ம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்தாராம்.


அதே போல தமிழில் உனக்கும் எனக்கும் அழகிய தமிழ் மகன் போன்ற பல திரைப்படங்களில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாராம். தொடர்ந்து நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement