• Jan 18 2025

யார் இந்த மாதவி.. ரஜினிகாந்திற்கும் இவருக்கும் இப்படி ஒரு தொடர்பா.. இதோ பலருக்கும் தெரிந்திடாத உண்மைகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

1980,90 களில் தன்னுடைய கண் அழகால் நிறைய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒருவரே நடிகை மாதவி. இவரின் உண்மையான பெயர் கனக விஜயலக்ஷ்மி. பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கியதும் தனது பெயரை மாதவி என மாற்றிக் கொண்டார்.


இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர். 1962-ஆம் ஆண்டு செப்டெம்பர் 14-ஆம் திகதி பிறந்தார். இவரின் அம்மா பெயர் சசிரேகா. அப்பா பெயர் கோவிந்த் சாமி. மேலும் இவருக்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உண்டு. இவர் ஹைதராபாத்திலுள்ள ஸ்டான்லி கேர்ள்ஸ் காலேஜ் இல் தான் படித்தார். சிறு வயது முதலே இவருக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். கிட்டத்தட்ட 1000 இற்கும் அதிகமான மேடைகளில் பரத நாட்டியம் ஆடி இருக்கின்றார். 


இவரின் 14-ஆவது வயதில் முதல் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. தமிழில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் மாதவி முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே பயங்கர ஹிட் கொடுத்தமையால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.


அந்தவகையில் கமல், ரஜினி, சிரஞ்சீவி எனப் பல முன்னணி நடிகர்களுடனும் போட்டி போட்டு நடித்தார். கிட்டத்தட்ட 7மொழிகளில் 300 இற்கும் அதிகமான படங்களில் இவர் நடித்திருக்கின்றார். ஹிந்திப் பக்கமாக சென்ற அவர் சில மன அழுத்தங்களின் காரணமாக ஆன்மீகத்தில் இறங்கினார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்திருக்கின்றார். இவர் தான் மாதவிக்கு ஸ்ரீராமா சுவாமிஜி என்ற ஆன்மீக வாதியை அறிமுகப் படுத்தி வைத்தார்.


சுவாமிஜி சொன்ன படியே அனைத்தையும் மேற்கொண்டு வந்தார் மாதவி. அதாவது சுவாமிஜி சொன்னவரையே இவர் தனது வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்திருக்கின்றார். அமெரிக்காவின் பெரிய பிஸ்னஸ்மான் ஆன ரால்வ் சர்மா என்பவரையே திருமணம் செய்து கொண்டார். 


அந்தவகையில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 14-ஆம் தேதி நான்கு திருமண முறைப்படி இவர்களது திருமணம் இடம்பெற்றது. இதன் பின்னர் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்தத் தம்பதியினருக்கு தற்போது 3பெண் குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டாலும் இன்றுவரை தனக்கு இந்தியாவில் ரஜினிகாந்த் உட்பட நிறைய நெருங்கிய நண்பர்கள் இருப்பதாக கூறி வருகின்றார் மாதவி.

Advertisement

Advertisement