• Mar 25 2026

வெளியானது 'தாய் கிழவி' படத்தின் OTT ரிலீஸ் தேதி... எந்த பிளாட்பார்மில் தெரியுமா?

shali / 4 hours ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் கதையின் மைய நாயகியாக நடித்து தனது அனுபவம் மிக்க நடிப்பால் பாராட்டுகளை குவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருப்பது கூடுதல் கவனத்தை பெற்றது.


இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா வழங்கிய பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தின் உணர்ச்சி அம்சங்களை வலுப்படுத்தியதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதனுடன் அருள்தாஸ்,முனீஷ்காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் OTT வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி, JioHotstar தளத்தில் ‘தாய் கிழவி’ திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement