தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்வு செய்வதில் வல்லவராகத் திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த புதிய படம் ‘ரிவால்வர் ரீட்டா’, ஜே. கே. சந்துரு இயக்கத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி திரைக்கு வந்திருந்தது.

துவக்கத்திலிருந்தே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம், கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே பல பெண் மையப்படங்களில் வெற்றிகரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது தான்.
ஆனால், ‘ரிவால்வர் ரீட்டா’ வெளியான பின்னர் எதிர்பார்த்த அளவில் வரவேற்பு இல்லாததால், படம் ரசிகர்களையும் ஏமாற்றியுள்ளது.

‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து அனுபவம் வாய்ந்த நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தற்பொழுது வெளியான தகவலின் படி, ‘ரிவால்வர் ரீட்டா’ 7 நாட்களில் உலகளவில் ரூ. 4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!