• Apr 01 2023

ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் முதல் நாள் பெற்ற வசூல் எவ்வளவு தெரியுமா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


ஜெயம் ரவி கேங்ஸ்டாராக நடித்துள்ள அகிலன் திரைப்ப்டம் நேற்று திரையரங்கில் வெளியான நிலையில், இப்படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், தருண் அரோரா, ஜிராக ஜானி ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

அகிலன் திரைப்படம் நேற்று 500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டர் வேலை செய்யும் இவர், கள்ள கடத்தல், ஆள்கடத்தல், துறைமுகத்தில் அகிலன் தான் எல்லாமே என்று பெயர் எடுத்துவிடுகிறார்.


கடலில் நடக்கும் கடத்தல், கொள்ளை என அனைத்திற்கும் பின்னால், தலைவனாக கபூர் இருக்கிறார் என்பதை தெரிந்த கொண்ட அகிலன் எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு பக்கம் போலீஸ் அகிலனை கைது செய்ய நினைக்கா, மறுபக்கம் அகிலன் கபூரை சந்திக்க முயற்சி செய்ய இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.


அகிலன் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் சிறப்பாக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகிலன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் 1.70 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. முதல் நாளில் 3 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் இதுமிகவும் குறைவுதான். இருந்தாலும், அண்மையில் வெளியாக அயோத்தி மற்றும் பகாசுரன் படங்களுடன் ஒப்பிடும் போது இது மிகப்பெரிய வசூலாகவே பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement