மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் இணைந்து நடித்த "விடாமுயற்சி" திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானபோது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் "லைகா" நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு இசையமைப்பாளரான அனிருத் இசையமைத்திருந்தார்.மற்றும் இப் படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் படத்திற்கு எதிரான விமர்சனங்கள் பல வந்தபோதும் அது ரசிகர்களிடையே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இப்படம் 16 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 135 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெற்றியுடன் அஜித் ரசிகர்கள் அவரின் அடுத்த படமான "குட் பேட் அக்லி" படத்திற்காக ஏப்ரல் மாதம் வெளிவர உள்ள எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். என்னதான் இத்தனை வரவேற்பு கிடைத்திருந்தாலும் படக்குழு இதுவரை வசூல் அளவில் மிகவும் அமைதியாக இருப்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை ஒரு சில வசூல் அளவுகள் வெளியாகி வந்திருப்பினும் அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!