• Apr 23 2025

ரசிகர்கள் பாலாவிற்கு கொடுத்த சப்ரைஸ்....! அதிர்ச்சியடைந்த நடிகர்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகிய பாலா அதனை அடுத்து “fire” என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கவர்ந்திருக்கின்றார். இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் தமது கருத்துக்களை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

பாலாவின் “fire” வெறும் படமல்ல அது ஒரு கலையின் வெளிப்பாடு என்றனர். அவர்களது கருத்துகள் மற்றும் பாராட்டுகள் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தது. மேலும் “இந்த படம் உன் வாழ்க்கைக்கு ஓர் ஊக்கம் என்றதுடன் பாலா, நீ எப்போதும் எங்கள் இதயத்தில் எரியும் தீபமாக இரு,” போன்ற வார்த்தைகளால் பாலாவை பாராட்டினார்கள்.


மேலும் பாலாவை நெகிழ்ச்சியடைய வைக்கும் படியாக ரசிகர் ஒருவர் பாலாவிற்கு தங்க சங்கிலியை பரிசாக அணிவித்திருந்தார். அத்துடன் ரசிகர் அந்த தங்க சங்கிலியை அவருக்கு மேல் அணிவித்து, “இந்த பரிசு உன் உழைப்பிற்கான சிறிய நினைவூட்டல்,” என்று கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இப்போது, இந்த ரசிகர்களின் ஆதரவு பாலாவின் எதிர்கால பாதையை மேலும் பிரகாசமானதாக மாற்றும் என்றே கூறலாம்.








Advertisement

Advertisement