தமிழ்த் திரையுலகத்தின் பிரபல நட்சத்திரமும் கார் ரேஸருமான அஜித் குமார், சமீபத்தில் தான் சாதித்த வெற்றியின் பின்னணி மற்றும் பயிற்சி என்பவற்றை உலகம் காண்பதற்காக வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி உள்ளது.
துபாயில் நடைபெற்ற கார் ரேஸில், அஜித் குமார் தனது திறமையால் 3வது இடத்தைப் பிடித்து, போட்டியில் வெற்றியடைந்தார். இவர் திரை உலகத்தில் சாதித்த வெற்றிகளுக்குப் பின், கார் ரேஸிங் துறையிலும் அஜித் சாதனை படைத்துள்ளார் என்பதை ரசிகர்கள் தற்பொழுது காண்கிறார்கள்.
அஜித் குமார் ஸ்பெயினில் நடைபெறும் முக்கிய கார் போட்டியில் பங்கேற்கும் முன்பாக, வாலென்சியாவில் உள்ள பிரபலமான பந்தைய மைதானத்தில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். அந்த பயிற்சிக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பரபரப்பை எழுப்பியுள்ளது.
ஸ்பெயினில் நடைபெறவிருக்கும் இந்த போட்டி, அஜித் குமாரின் ரேஸிங் வாழ்க்கையில் முக்கிய அத்தியாயமாக கருதப்படுகிறது. அத்துடன் அந்த வீடீயோவைப் பார்த்த ரசிகர்கள் "இதனைப் பார்க்கவே தலை சுத்துது எப்படித் தான் இவர் ஓட்டுறாரோ தெரியல" என்று கமெண்ட்ஸ் கூறிவருகின்றனர்.
Listen News!