• Jan 18 2025

நடிகை ரஞ்சினி சினிமாவிற்குள் எப்படி வந்தார் தெரியுமா?- இவருடைய உண்மையான பெயர் இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் சமூக ஆர்வலராகவும் வழக்கறிஞராகவும் பெண்களுக்கு ஏதும் பிர்ச்சினையென்றால் முதலில் குரல் கொடுப்பவர் தான் ரஞ்சினி. இவர் யார் என்றும் எப்பிடி சினிமாவிற்குள் வந்தார் என்பதையும் பார்க்கலாம் வாங்க.

1970ம் ஆண்டு தமிழகத்தில் தான் ரஞ்சினி பிறந்தார். இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர்கள் குடும்பம் சிங்ககப்பூரில் குடியேறியதால் அங்கு தான் வளர்ந்து வந்தார்.இவருடைய அப்பா பெயர் செல்வராஜ், அம்மா பெயர் லில்லி. இவர்களுடைய இயற்பெயர் சசிகலா சாசா. இவருக்கு இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.


இவருடைய அப்பா சிங்கப்பூரில் பிரபல கல்லுாரி ஒன்றில் கணக்காளராக இருந்தார். இது தவிர சினிமாவில் விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.சிங்கப்பூரிலேயே கல்வி பயின்று வந்த இவர் முறைப்படி பரதம் எல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றாராம். கலை மீது மட்டுமல்லாது படிப்பின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராம்.

மேலும் பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான துாறல் நின்னுபோச்சு என்னும் திரைப்படத்தின் இசை விழா சிங்கப்பூரில் நடந்ததாம். இந்த நிகழ்வில் ரஞ்சினியைப் பார்த்த பாக்கியராஜ் நடிக்க அழைத்தாராம். ஆனால் ரஞ்சினியின் அம்மா இதற்கு சம்மதிக்கவில்லையாம். பினன்னர் சென்னை வந்த ரஞ்சினியை ஒரு நாள் ஹீரோயினாக தேர்ந்தெடுப்பதற்காக போட்டோஷுட் நடத்தினாராம் பாக்கியராஜ்.


ஆனால் அதில் அவர் சின்னப்பிள்ளை மாதிரி இருந்ததால் அடுத்த படத்தில வாய்ப்புக் கொடுக்கலாம் என்று கூறினாராம் . இதனால் பின்னர் படிப்பினைத் தொடர்ந்து வந்தாராம். இரண்டு வருடங்கள் கழித்து இந்தப் புகைப்படத்தை பார்த்த பாரதிராஜா இவரை நடிக்க அழைத்தாராம். இதனால் சென்னை வந்த இவர் ரஞ்சினி என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டாராம்.

பின்னர் பச்சைக் கொடி என்னும் படத்தில் நடித்தாராம். இருப்பினும் இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிவாஜி நடிப்பில் வெளியான முதல் மரியாதை என்னும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு 15 வயதாம். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நாயகியாக நடித்திருக்கின்றாராம்.


மேலும் கேரளாவைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 1993ம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகி விட்டாராம். தொடர்ந்து சமூக ஆர்வலராகவும் அநியாயம் நடக்கும் இடங்களில் குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகின்றாராம். இவருக்கென்று தற்பொழுதும் பல ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement