• Jan 18 2025

நடிகர் அர்ஜுன் தாஸ் சினிமாவிற்குள் எப்படி நுழைந்தார் தெரியுமா?- இதுவரை கேள்விப்படாத ரகசியம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காந்தக் குரலுக்கு சொந்தமானவர் என்று அழைக்கப்படுபவர் தான் அர்ஜுன் தாஸ் . இவர் கைதி மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் படித்து முடித்ததைத் தொடர்ந்து துபாயில் வேலை செய்து வந்தார். இருப்பினும் தன்னுடைய வாழ்க்கை வெறுமையாக இருப்பதை உணர்ந்து சென்னையில் வந்து நடிக்க ஆரம்பித்தார்.


அதன்படி முதலில் இவர் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகினார். இவர் அறிமுகமாகிய போது யாரும் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதனால் தன்னுடைய சினிமாக் கெரியரை பின்பற்ற ஆரம்பித்தாராம். அதற்காக பல முறை முயற்சி செய்ததோடு குறும்படங்களில் நடிதது வந்தாராம்.


பின்னர் தெலுங்கில் ஆக்சிஜன் என்னும் படத்தில் நடித்திருந்தாராம். இருப்பினும் தமிழில் நடிக்க வேண்டும் என்பதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் அன்பு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானாராம். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதியுடனும் நடித்திருந்தார்.


மேலும் அட்லி தயாரிப்பில் உருவாகும் அந்தாரகம் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தாராம்.இப்படத்தில் இவருடைய நடிப்பு சூப்பர் ஹிட்டானதோடு இவருக்கு படவாய்ப்பும் குவிய ஆரம்பித்ததாம். இதனை அடுத்து தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றாராம். எங்கே அவமானப்பட்டோமோ அங்கே தான் முன்னேற வேண்டும் என்பது இவருடைய குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement