• Nov 22 2024

காதல் தோல்வி... கல்யாண வாழ்க்கை... இதயத்தை திருடாதே சீரியல் ஹீரோ நவீன் பற்றி தெரியுமா?

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற தொடர் படு பிரபலமாக ஓடியது. 2 பாகங்கள் வெற்றிகரமாக ஓடியது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. இந்த தொடர் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் நடிகர் நவீன்.  அவருடைய வாழ்க்கை பயணத்தை பார்க்கலாம் வாருங்கள் ,


இவர் ஜூலை 1999 ல் சென்னையில் பிறந்தார் . இவர் தமிழ் மற்றும் மலையாளம் சரளமாக பேசுவார் . 2004ம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து இருக்கிறார் . பல குறும்படங்களை நடித்த இவர் அதன் மூலமாகவே படங்களும் நடிக்க ஆரம்பித்தார் . 


கௌதம் கார்த்தியும் இவரும் நல்ல நண்பர்கள் இவர் கௌதம் கார்த்தியுடனும் இணைந்து நடித்தார். ஆனால் படம் திரைக்கு வரவில்லை. சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி  திரைப்படத்தில் துணைகதாப்பாத்திரமாக நடித்த இவருக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை . 


அந் நிலையில் இவருக்கு இதயத்தை திருடாதே சீரியலில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்து நடித்தார் . இந்த சீரியல் மூலம்  பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் . இவருடைய வாழ்க்கையில் காதல் தோல்வியும் இருந்து இருக்கிறது . 


இதயத்தை திருடாதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த பிந்துவும் இருவரும் நிஜ ஜோடியாக இருந்தால் நல்லா இருக்கும் என்று ரசிகர்கள் விரும்பினர் .


அதே போல இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது  சேர்ந்து புகைப்படங்கள் எடுப்பது  ரீல்ஸ் செய்வது என்று இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில் திடீர் திருப்பமாக நடிகை பிந்து நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி இருந்தார் . 


இந் நிலையில் நடிகர் நவீனுக்கும்  செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும் அண்மையில் தான் திருமணம் முடிந்தது. திருமண வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் நிறைய வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தன. ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது . 


சீரியலில் பல சவால்களுக்கு முகம் கொடுத்த இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சின்ன மருமகள் சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார் . இந்த சீரியலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறதா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் .


Advertisement

Advertisement