• Feb 23 2025

ஜவான் அளவிற்கு அலப்பறை கிளப்பும் ஹிருத்திக் ரோஷனின் Fighter படம்... சூப்பரான விமர்சனங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட்டர் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 


கடந்த ஆண்டு ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டி ஷாருக்கானுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. ஒரே வருடத்தில் ஹாட்ரிக் ஹிட் அடித்தார் பாலிவுட் கிங் கான். 


ஏற்கனவே சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடித்த வார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து ஷாருக்கானை வைத்து பதான் படத்தை இயக்கி இன்னொரு ஹிட் கொடுத்த சித்தார்த் ஆனந்த் இந்த முறையும் தேசப்பற்றுடன் குடியரசு தினத்துக்கு ஃபைட்டர் படத்துடன் வர காத்திருக்கிறார். 


கடந்த ஆண்டு பேக் டு பேக் பெரிய ஹிட் படங்களை கொடுத்த தீபிகா படுகோன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஃபைட்டர் படமும் அடுத்து பிரபாஸின் கல்கி படம் என மாஸ் காட்ட காத்திருக்கிறார்.


இந்த படத்திலும் பீச்சில் சிங்கிள் பீஸ் உடையில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் அவர் ஒட்டி உரசி நடித்து செம கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இப்படத்தை கண்ட ரசிகர்கள் கொடுக்கும் விமர்சனங்களை பாருங்கள்...  

Advertisement

Advertisement