• Mar 20 2026

உண்ம தெரியாம முத்துவ திட்டாதீங்க மீனா..! முத்து சொன்ன பதில்? சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நிகழ்ப்போவது என்ன?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. 

இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிடலில் இருக்கும் சத்யா, மாமா தான் என் கையை குடிச்சிட்டு வந்து உடைச்சாரு என மீனாவிடம் சொல்ல, கோபத்தில் முத்துவிடம் செல்கிறார் மீனா.

அங்கு வந்த மீனா, அங்கும் முத்து குடிச்சி இருப்பதை பார்த்துவிட்டு, என்ன அன்னைக்கும் என் தம்பி கைய உடைக்க போகும் போதும் இப்படி தான் குடிச்சி இருந்தீங்களா என கோவமாக கேட்கிறார்.


அதற்கு முத்து, ஆமா ஃபுல் போதையில் இருந்தன் என சொல்ல, இத்தனை நாளா ரோட்ல போற வாறவங்களுக்கு தான் அடிச்சிட்டு இருந்தீங்க.. இப்ப என் தம்பி, அவன் படிக்கிற பையன், அவன் கைய  உடைக்கலாமா? ஏன் உடைச்சீங்க என கேட்கிறார் மீனா.

இது தான் நாளைய நாளுக்கான ப்ரோமோ. முத்து உண்மையை சொல்லுவாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement