• May 02 2024

பாரதியார் பாட்டுடன் கர்ஜிக்கும் கம்பீர சிங்கமாய் சிவகார்த்திகேயன்! அலற வைக்கும் 'அமரன்' டீசர் இதோ...

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரையும் நடித்திராத புதிய கெட்டப்பில், அதாவது கம்பீரமான ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்த திரைப்படம் தான் அமரன்.

இந்த படம் முழுக்க முழுக்க தேசப்பற்று நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், அப் படத்தை  உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், ராணுவ உயர் அதிகாரியாகவும், சிங்கம் போல் கர்ஜிக்கும் தோரணையை உடையவராகவும் மிரட்டுகிறார்.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.


இந்த நிலையில் சற்றுமுன் அமரன் படத்தின் டீசர் வெளியாகி, சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகியுள்ளது.

காஷ்மீர் - இந்தியா இடையே நடக்கும் போர்க்காட்சிகள், ஒரு தலைவனாக தன்னுடைய குழுவில் உள்ளவர்களை எப்படி கையாளுகிறார், எப்படி ஊக்குவிக்கிறார் என்ற பல்வேறு விஷயங்களை இந்த டீசரில் காணமுடிகிறது.


அதேபோல, அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே என பாரதியார் பாடலை பாடிக் கொண்டு ராணுவ வீரர்களை வண்டியில் செல்வது,  யாரும் முகத்தை மறைக்கக்கூடாது, இதுதான் என் முகம்.. இது தான் இந்தியன் ஆர்மியின் முகம்  என்பதை காட்டு.. என்று சிவகார்த்திகேயன் கூறுவது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகிறது.

அமரன் படத்தில் முகுந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்  சிவகார்த்திகேயன். ஆனால் இதற்கு அமரன் என்று பெயர் வைத்ததற்கு காரணம் என்ன என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க, சி.எச்.சாய் ஒளிப்பதைவு செய்துள்ளார். இதோ வெளியான அமரன் படத்தின் டீசர்.....


Advertisement

Advertisement

Advertisement