• Apr 14 2026

வையுங்கடா கட்டவுட்ட! தரமான கோட் அப்டேட்! ரிலீஸ் தேதியோடு வந்த போஸ்டர் இதோ !

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் தளபதி விஜய் ஆவார். தமிழ் நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்குமே மிக பெரிய அளவில் வரவேற்ப்பும் , வரப்போகும் திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகளும் காணப்படுவது வழக்கமான ஒன்றே ஆகும்.


ஆனால் சமீபத்தில் இவர் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் செல்லப்போவதாக கூறியதில் இருந்து இவர் நடிக்கும் அடுத்த இரண்டு திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அவ்வாறே சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான கோட் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.


வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் இசையமைக்கின்றார். குறித்த படத்தின் தரமான அப்டேட் இன்று 1 மணியளவில் வரும் என வெங்கட் பிரபு தனது x தல பக்கத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில் இதன் போஸ்டர் வெளியாகி உள்ளது. குறித்த போஸ்டரில் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

போஸ்டர் இதோ   


Advertisement

Advertisement