தமிழ் சினிமாவின் சிறப்பான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்த மங்காத்தா இன்று (23.01.2026) திரையரங்குகளில் மீண்டும் திகழ்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம், அஜித் ரசிகர்களின் மனதில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.

அஜித்தின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் முதல் முயற்சியாக வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு மங்காத்தா திரைப்படத்தை படக்குழு ரீ-ரிலீஸ் செய்துள்ளது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலேயே அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
ரசிகர்கள் பெரும்பான்மையான excitement-உடன் திரையரங்குகளிற்கு சென்றுள்ளனர். மங்காத்தா ரீ-ரிலீஸை ஒட்டி, இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு விரிவான பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில், படத்தின் பின்னணியில் நடந்த சில பிரச்சினைகள் மற்றும் கதையின் சுவாரஸியங்கள் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

வெங்கட் பிரபு அதன்போது, அஜித்துக்கு முன்பு பொலீஸ் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க முன்வந்தார். ஆனால் படத்தின் விசேஷ தேவைகளின்படி, அஜித்தை சந்திக்க வாய்ப்பு வந்து... அவருக்கு கதையினை சொன்ன உடனே மிகவும் பிடித்துவிட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு ஒட்டுமொத்த கேரக்டர் காஸ்டிங் மாற்றப்பட்டு, அஜித் கதாபாத்திரத்தில் இறங்கினார்." என்றார்.
அத்துடன், அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் நாகர்ஜூனா எனவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். ஆனால், கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக, அவர் அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியவில்லை. பின்னர், அந்த கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Listen News!