• Apr 15 2026

பின்னணி பாடகி ஜானகி குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.! வைரலான பதிவு

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய இசை உலகில் பிரபல பின்னணி பாடகியாகி சாதனை படைத்த எஸ். ஜானகியின் குடும்பத்தில் நேற்று (ஜனவரி 22, 2026) ஒரு பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. அவரது மகன், முரளி கிருஷ்ணா, ஹைதராபாத்தில் தனது தாயாருடன் வசித்து வந்தபோது காலமாகியுள்ளார். இந்த செய்தி திரையுலகம் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முரளி கிருஷ்ணாவின் மறைவு செய்தியை அறிந்து பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு இரங்கல் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அவர் அதன்போது, "புகழ்மிக்க பாடகியும், என் பிரியத்துக்குரிய சகோதரியுமான ஜானகி அவர்களின் புதல்வர் முரளி ஸ்ரீ கிருஷ்ணா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்; மகனை இழந்து வாடும் ஜானகியம்மாவுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement