• Sep 20 2024

முதல் முதலாக நடனமாடிய இயக்குநர் செல்வராகவன்- அதுவும் என்ன படத்தில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் செல்வராகவன். இவர் இயக்கத்தில் நானே வருவேன் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் இவருடைய தம்பியான தனுஷ் நடித்து வருகின்றார்.

இது தவிர தற்பொழுது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இது தவிர கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் என்னும் படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் பகாசூரன் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரிக்க, சாம் இசையமைத்து வருகிறார். பகாசூரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் சிவன் பாடலுக்கு செல்வராகவன் முதன் முதலாக நடனம் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement