• May 04 2024

நயன்தாராவின் 75 படத்தில் இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கா?-மாஸ்டர் பிளான் தான் போட்டிருக்கிறாங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகையான நயன்தாரா விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்த பின்னர் படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றார்.இந்நிலையில், தனது 75வது படத்தை இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணாவை வைத்து இயக்க வைக்க வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.

சமீப காலமாக அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்கள் எல்லாம் ஃபிளாப் ஆகி வரும் சூழலில் ரியல் லேடி சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இந்த படத்தில் கமிட் ஆகி இருப்பதாக கூறுகின்றனர்.

மாயா, அறம் படங்களை போல தனது 75வது படமும் ஒரு லேண்ட்மார்க் படமாக இருக்க வேண்டும் என நயன்தாரா முடிவு செய்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் கதை தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.மேலும், நயன்தாராவின் 75வது படத்துக்கு அன்னபூரணி என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்த படத்தை முதலில் தயாரிக்க நினைத்ததாகவும், நயன்தாரா நடித்தால் நல்லா இருக்கும் என இயக்குநர் அடம் பிடித்த நிலையில், டிரைடண்ட் ஆர்ட்ஸ் உள்ளே நுழைந்து படத்தை ஜி ஸ்டூடியோஸ் உடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக கூறுகின்றனர்.

கூடிய விரைவிலேயே அதிகாரப்பூர்வ டைட்டில் மற்றும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement