• May 18 2024

நிர்வாணக் கோலத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம்- இரவின் நிழல் நடிகையின் ஓபன் டாக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் பார்த்திபனின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் இரவின் நிழல்.இப்படத்தில் பார்த்திபன் தான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அத்தோடு இப்படத்திற்கு சர்வதேச விருதுகளும் குவிந்து வருகின்றது.நடிகர் ரஜினிகாந்த் பார்த்திபனின் அசாதாரண முயற்சியை வியந்து பாராட்டி உள்ளார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் பிரிகிடா. இவர் ஒரு குறும்படத்தில் பவி ரீச்சர் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது

இரவின் நிழல் படத்தில் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணக் கோலத்தில் எப்படி நடிச்சீங்க என்கிற கேள்விக்கு ரொம்பவே கூச்சப்பட்டு பதில் கூறி உள்ளார் பிரிகிடா. சேலை அணிந்து சென்றாலே சரியாக இருக்கிறதா? என பல முறை சரி செய்யும் பெண் தான் நான். ஆனால், அந்த கதாபாத்திரம் ரொம்பவே புனிதமானது. அதற்கு அப்படியொரு விஷயம் நடக்கும் போது, அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரிய வைத்தார்.

ஆனால், இதை என் பெற்றொர்களிடம் எப்படி சொல்வது என்பது எனக்கு பெரிய நெருடலாக இருந்தது.எனது கதாபாத்திரம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறி விட்டு இப்படியொரு சீனும் இருக்கு, அது இருந்தால் தான் அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் என பெற்றோரிடம் எடுத்துக் கூறினேன். பார்த்திபன் சாரும் வந்து பேசினார். பின்னர், அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் அந்த காட்சி நிச்சயம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும், அது கவர்ச்சியாக இருக்காது. அங்கே புனிதம் மட்டுமே தெரியும் என இந்த படம் எனக்கு இத்தனை சீக்கிரம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு என்று பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement