• May 25 2026

எப்படி இவ்வாறு உழைக்க முடியும்.? தனுஷைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இயக்குநர் செல்வராகவன்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் செல்வராகவன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனுஷின் விடாமுயற்சி, தொடர் படப்பிடிப்பு பணிகள் குறித்து பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளன.


அந்நேர்காணலில், “என்னடா.. தம்பி தனுஷ் "D 55" , "D 56" ன்னு வரிசையா போய்கிட்டே இருக்கிறார்னு ஆச்சரியப்படுவேன். ஒரு நாள் அவர்கிட்டயே போய் எப்படி இப்படி பண்ண முடியுது? என்று கேட்டேன். அதுக்கு தனுஷ் வேற என்ன பண்ணுறது சொல்லுங்கன்னு சிம்பிளா சொன்னார். 

நினைச்சுப் பார்த்தா அந்தத் தொடர் ஓட்டம் ஒரு ஆசிர்வாதம். முன்பெல்லாம் நடிகர்களிடம் நடிப்பின் அளவு பற்றி ரொம்ப கண்டிப்பா இருப்பேன். எனக்கு நடிப்பில் இருக்கும் கஷ்டம் தெரியும். ஆனா, அதுக்காக இவ்வளவு கஷ்டப்படணுமான்னு நான் நடிச்சுப் பார்க்கும் போது தான் புரியுது." என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

அத்துடன், செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்து பல படங்களை ரசிகர்களுக்காக வழங்கியுள்ளனர். இருவருக்கும் இடையிலான புரிதல் மற்றும் நம்பிக்கை தான் இந்த வெற்றிக்குக் காரணம் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. 

Advertisement

Advertisement