• Oct 09 2024

ஹாப்டன்சி டாஸ்கில் வெற்றி பெற்ற தினேஷ்..! அடுத்த வாரம் சும்மா தெறிக்கப்போகுது..! புலம்பி நிற்கும் 'புல்லி கேங்'

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் இணைந்து கொண்ட கமல், அவர்களுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.


இவ்வாறான நிலையில், அடுத்த வாரத்திற்கான ஹாப்டன்சி யார் என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதில் தினேஷ், ஜோவிகா, ஐசு  ஆகியோரின் பெயர்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டது

இதை தொடர்ந்து மூன்று பேருக்கும் டாஸ்க் வைக்கப்பட்டு அதில் தினேஷ் வெற்றி பெறுகிறார்.இதன் போது அடுத்த வாரத்திற்கான கேப்டன் தினேஷ் என பிக் பாஸ் அறிவிக்கின்றார்.

இதன்போது வெற்றி பெற்ற தினேஷ் கூறும்போது, 'என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மற்றும் உற்சாகம் அளித்த ஸ்மோல் பாஸ் வீட்டிற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.அடுத்த வாரம் சிறப்பாக இருக்கும்' என கூறி முடிக்கிறார் தினேஷ்.


Advertisement