• Apr 03 2025

'தில்பரு ஆஜா' சிம்பு குரலில் 'டீசல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு...!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ச்சியடைந்து வரும் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஹரிஷ் கல்யாண், தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்  "டீசல்" எனும் படத்தில் நடித்து வருகின்றார். "பார்க்கிங்", "லப்பர் பாந்து" போன்ற வெற்றிப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் இப்போது "டீசல்" படத்தின் மூலம் மேலும் ஒரு ஹிட்டைக் கொடுக்கப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர் இணைந்து 'தில்லுபாரு ஆஜா' என்ற இரண்டாவது பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களிடையே பரவலாக சர்ச்சைகளை உருவாக்கி அந்த நேரத்தில் கவர்ச்சியுடன் வெளியாகியுள்ளது.


நடிகர் சிலம்பரசனின் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. "டீசல்" படத்தின் மீதான ஆர்வம் வளர்ந்துள்ள நிலையில் இந்த பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வீடியோ இதோ...

Advertisement

Advertisement