• Feb 19 2025

கீர்த்தி பாண்டியனின் பிறந்தநாளை கொண்டாட்டமாக மாற்றிய படக்குழு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன், தனது அடுத்த படமாக "அஃகேனம் " திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் அவரது உணர்ச்சி மிகுந்த நடிப்பாகவும், வித்தியாசமான கதைக்களமாகவும் இருப்பதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும், இது ஒரு ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் வகை படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பிரபல இயக்குநர் உதய் இயக்கத்தில் உருவாகிய  இந்தப்படத்தை பரத் வீரராகவன் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் நாயகியாக நடிக்கும் கீர்த்தி பாண்டியன், இதுவரை நடிக்காத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement