• Dec 04 2023

தித்திக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்- ஐந்து நாட்களில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தீபாவளி ரிலீசாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.

 இதனால் படத்தின் வசூல் முதல் நாளை காட்டிலும் அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வருகிறது.படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது வாழ்த்து செய்தியில், ஜிகர்தண்டா 2 படம் ஒரு குறிஞ்சி மலர் என குறிப்பிட்டு படத்தை வெகுவாக பாராட்டி கார்த்திக் சுப்புராஜை நினைத்து தான் பெருமைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். 


இதொரு புறம் இருக்க,படத்துக்கு விமர்சன ரீதியாக பெரும் ரெஸ்பான்ஸ் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. முதல் நாளில் 2.5 கோடி ரூபாயும் இரண்டாவது நாளில் 4.86 கோடி ரூபாய், மூன்றாவது நாளில் 7.2 கோடி ரூபாய், நான்காவது நாளில் 4 கோடி ரூபாய் என மொத்தம் 19 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.


 இந்நிலையில் ஐந்தாவது நாளான நேற்று ஜிகர்தண்டா 2 திரைப்படம் 2லிருந்து 3 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் இதுவரை மொத்தம் 21லிருந்து 22 கோடி ரூபாய்வரை தமிழ்நாட்டில் வசூலித்திருப்பதாகவும் உலக அளவில் கடந்த ஐந்து நாட்களில் மட்டுமே ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement