• May 03 2026

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையா? டொவினோ தாமஸ் கொடுத்த விளக்கம்

shali / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், கயாடு லோஹர் ஹீரோயினாக நடித்துள்ளார்.


ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நீண்ட நாட்களாக ரசிகர்களிடம் நிலவி வந்த முக்கிய சந்தேகத்திற்கு படக்குழு தற்போது விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டொவினோ தாமஸ், இப்படம் முழுமையான உண்மைச் சம்பவம் அல்ல என்று தெளிவுபடுத்தினார். 

1958 காலகட்டத்தில் கேரளாவில் நடந்த சில நிஜ சம்பவங்களைத் தழுவி, கற்பனையான கதாபாத்திரங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்றதாகவும், நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் இதில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார். 1950-களின் கேரளாவின் சூழலை அப்படியே திரையில் கொண்டு வர படக்குழுவினர் பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.

படத்தின் கதை, காட்சியமைப்பு மற்றும் காலப்பின்னணி ஆகியவை ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “இந்தப் படம் ரசிகர்களை நிச்சயமாக ஏமாற்றாது” என டொவினோ தாமஸ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement