தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அந்தத் தொகுதி உட்பட பல பகுதிகளிலும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
சந்தையில் மக்களைச் சென்று சந்திப்பது, காய்கறி வாங்குவது, ஆற்றங்கரையில் ஆடை துவைப்பது, ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்குவது போன்ற பல இடங்களில் இயல்பாகப் பேசி தன்னுடைய வாக்குகளைத் திரட்டி வந்தார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் பெண்களின் துணியை துவைத்து வாக்குகளைத் திரட்டிய மன்சூர் அலிகான், "தன்னை வெற்றி பெறச் செய்தால் விவசாயிகளுக்காக வாழை கொள்முதல் நிலையமும் நெல் கொள்முதல் நிலையமும் அமைக்கப்படும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தித் தருவேன்" என உறுதியளித்திருந்தார்.
மேலும் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த மன்சூர் அலிகான், "மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் தண்டவாளத்தில் தலை வைத்துப் பார்த்தேன்" என்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறு பல வழிகளில் மக்களை ஈர்த்து வாக்குகளைத் திரட்டி வந்த மன்சூர் அலிகான், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Listen News!