• Sep 20 2024

இரன்டாவது நாள் யானை படம் இத்தனை கோடி வசூலா..? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய்.தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் யானை. இயக்குநர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, போஸ் வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து இருக்கிறது.

பல முறை இந்த படத்தின் வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்த நிலையில் ஒருவழியாக இந்த படம் வெளியாகி உள்ளது.அத்தோடு படத்தில் ஊருக்குள் கௌரவமாக பிஆர்வி குடும்பம் வாழ்ந்து வருகிறது. மேலும் இந்த குடும்பத்தின் இளைய மகனாக இருப்பவர் தான் ரவி(அருண் விஜய்). குடும்பத்தின் மீதும், தனது அண்ணன்கள் சமுத்திரகனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார்.

என்னதான் அருண் விஜய் தனது அண்ணன்களை உடன் பிறந்தவர்கள் என்று பார்த்தாலும் அவர்கள் மூவரும் அருண் விஜய்யை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்தவனாக தான் எண்ணுகிறார்கள். இன்னொரு பக்கம் பிஆர்வி குடும்பத்தின் மீது இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார் வில்லன் லிங்கம்.

மேலும் அதை சுமுகமாக முடிக்க நினைக்கிறார் அருண் விஜய். அதற்காக அவர் பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வியிலேயே முடிகின்றது. இந்த சமயத்தில் பிஆர்வி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உருக்குலையும் விதத்தில் சம்பவம் ஒன்று நிகழ்கிறது.

இதில் அருண் விஜய் சிக்கிக்கொள்கிறார். இதனால் உடனடியாக அருண் விஜயை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள் அண்ணன்கள்.எனினும் இதன் பின் இறுதியில் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? வில்லன் பிஆர்வி குடும்பத்தை என்ன செய்தது? அருண்விஜய் இதெல்லாம் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை. மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் யானை முதன் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கண்டிப்பாக இந்த படம் அருண் விஜய் கெரியர் பெஸ்ட் கலேக்‌ஷன் படமாக இருக்கும் என்று தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement