• Sep 07 2024

மாரியை வென்றாரா சூரி? சிவகார்த்திகேயனின் நம்பிக்கை வென்றதா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

கூழாங்கல் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் பி.எஸ் வினோத் ராஜ். இவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கொட்டுக்காளி இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, அதில் நடிகர் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் 'தி அட்மென்ட் கேர்ள்' என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பெர்லின் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது. 

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் வித்தியாசமான பார்வையோடு எந்தப் பின்னணி இசையும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த படத்தின் ட்டெய்லரே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டியது. படம் வெளியாகி படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றார்கள்.

இந்த நிலையில், கொட்டுக்காளி படத்தின் முதலாவது வசூல் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.


அதன்படி நேற்றைய தினம் வெளியான சூரியின் கொட்டுக்காளி  திரைப்படம் சுமார் 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக கூறப்படுகின்றது. இனிவரும் நாட்கள் விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் முதல் நாளிலேயே 1.33 மூன்று கோடிகளை வசூலித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement