• May 20 2024

இத்தனை கோடி கொடுத்து தான் தமன்னாவை தட்டித் தூக்கினாரா சுந்தர்.சி..? ஷாக் நியூஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனரான சுந்தர்.சி இயக்கத்தில், அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அரண்மணை 4. இந்த திரைப்படம் கடந்த நான்காம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது.

அரண்மணை 4வது படத்தில் சுந்தர்.சியுடன் தமன்னா, ராசி கன்னா, கோவை சரளா, யோகி பாபு உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இதுவரை வெளியான அரண்மணை படத்தின்  மூன்று பாகங்களை விடவும் இந்த படம் மிகவும் த்ரில்லராக காணப்படுவதால் ரசிகர்கள் தியேட்டரில் அலைமோதி  வருகின்றார்கள்.


இந்த நிலையில், அரண்மணை 4வது படத்தில் நடிப்பதற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி இந்த படத்தில் நடிப்பதற்காக தமன்னாவுக்கு 4 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற அச்சோ அச்சோ அச்சச்சோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு, இந்த பாடலை பார்ப்பதற்காகவே பலரும் தியேட்டருக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement