• May 24 2026

திடீரென முடிவை மாற்றினாரா ரவி மோகன்.? மீண்டும் படப்பிடிப்பில் ரீ-என்ட்ரி… காரணம் என்ன?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரை வாழ்க்கையில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக சமீப காலமாக அதிக கவனத்தை பெற்றுள்ளார்.

சினிமாவில் “ஜெயம் ரவி” என்ற பெயரில் அறிமுகமாகி, பல ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், தற்போது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், “விவாகரத்து முடியும் வரை புதிய படங்களில் நடிக்க மாட்டேன்” என கூறியதாக தகவல்கள் வெளியானது.

மேலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும் பரவிய நிலையில், பாடகி கெனிஷாவுடன் ஏற்பட்ட நெருக்கம் பற்றிய பேச்சுகளும் இணையத்தில் விவாதமாகின.  


ஒரு கட்டத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாடகி கெனிஷா, ரவியை விட்டு மொத்தமாக விலகி செல்வதாக கூறி ஊரை விட்டே காலி பண்ணியிருந்தார். அதற்கு பின்பு தான் ரவி மோகனும் ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்நிலையில்,  தனது முடிவை நடிகர் ரவி மோகன் மறுபரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு, நடிகர் கார்த்தி அவரை நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் தைரியம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ரவி மோகன் மீண்டும் திரைப்பட பணிகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும், முதலில் ‘ப்ரோ கோட்’ படத்தின் பணிகளை தொடங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement