• May 24 2026

'கருப்பு' சூர்யாவின் கம்பேக் என்றாங்க.. ஆனால் வசூலைப் பார்த்தால் அப்படி தெரியலையே.?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

கருப்பு திரைப்படம் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்து வருகிறது. கடந்த மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், சூர்யாவின் திரை வாழ்க்கையில் நீண்ட காலமாக காத்திருந்த மாஸ் கம்பேக் திரைப்படமாகவும் பார்க்கப்படுகிறது.

இயக்குநர் R. J. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படம், ஆக்ஷன், எமோஷன் மற்றும் சமூக கருத்துக்களை இணைத்து ரசிகர்களை திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.


படம் வெளியான முதல் நாளிலிருந்தே தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் தொடர்ந்தன. 

குறிப்பாக ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியை இன்னும் உயர்த்தியது. சில இடங்களில் ரசிகர்கள் சாமி ஆடிய சம்பவங்களும் இணையத்தில் பேசுபொருளானது.

9 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள கருப்பு திரைப்படம் தற்போது உலகளவில் ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால், இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.


Advertisement

Advertisement