சினிமா உலகில் சில திரைப்படங்கள் நடிகர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், முழு சினிமாவின் போக்கையே மாற்றியமைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் முக்கியமான ஒன்றாக நினைவுகூறப்படுவது நடிகர் அஜித் குமார் நடித்த ‘தீனா’ திரைப்படம்.
இந்த படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல், அவரை ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த படமாகவும் அமைந்தது.
இந்த நிலையில், ‘தீனா’ படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அந்த படத்தின் டப்பிங் பணிகளின் போது நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

2001 ஆம் ஆண்டு வெளியான ‘தீனா’ திரைப்படம், அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. அதற்கு முன்பு காதல், குடும்பம் சார்ந்த கதைகளில் நடித்துவந்த அஜித், இந்த படத்தின் மூலம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் ரௌடி கதாபாத்திரம் எனும் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்தித்தார்.
இந்த வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கும் கடின உழைப்பு மற்றும் தியாகங்களை பற்றி தற்போது இயக்குநர் முருகதாஸ் பகிர்ந்துள்ள தகவல்கள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளன.
அவர் கூறுகையில்,“தீனா படத்தின் படப்பிடிப்புகளின் போது, அஜித் சார் மிகவும் அதிகமான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளின் போது அவர் மிகுந்த சிரமத்தை சந்தித்தார். ஆனாலும், அதையெல்லாம் வெளியில் காட்டாமல், படப்பிடிப்பை தொடர்ந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
Listen News!