சமூக ஊடகங்களில் பிரபலங்கள் பேசும் சில கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் அளித்த ஒரு பேட்டி, சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் குறித்து அவர் பகிர்ந்த ஒரு சம்பவம், தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகை தேவயானி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். அவரின் கணவர் ராஜகுமாரன் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் பணியாற்றியவர்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், ராஜகுமாரன் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசினார். அவர் அதன்போது, “ஒரு நாள் எனக்கு போன் பண்ணி, ‘கமல் சார் மதியம் உங்க வீட்டுக்கு சாப்பிட வராங்கன்னு சொன்னாங்க. அப்போ நான், ‘நாங்க ஏற்கனவே சென்னை கிளம்பிட்டோம். வீட்டு சாவியை தாரோம், அவர் வந்து சாப்பிட்டு போகட்டும்’ன்னு சொன்னேன்.
“இதைக் கேட்ட பின் அவர்கள் என்னிடம், ‘உங்களை சந்திக்கத்தானே கமல் சார் வர்றாரு’ன்னு சொன்னாங்க. அதுக்கு நான் என்ன சொன்னேன்னா, ‘நாங்க 30 வருஷமா சென்னையில இருக்கோம். அந்த 30 வருஷத்துல ஒரு நாளும் வராத கமல், இப்போ அரசியல் நிமித்தமா சந்திக்க வர்றது எனக்கு பிடிக்கல’ன்னு சொல்லிட்டேன்.” என்று கூறியிருந்தார்.
இந்த பதில், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அத்துடன் ராஜகுமாரன் தனது கருத்தின் மூலம், கமல்ஹாசன் மீது மரியாதை இருப்பதாகவும், ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் சந்திக்க வருவது தனக்கு உகந்ததாக இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
Listen News!