• Jul 09 2026

தனுஷ் மகன் யாத்ரா சினிமாவுக்கு வர விரும்பவில்லையா? வைரலாகும் புதிய தகவல்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் புதிய நட்சத்திர வரவாக நடிகரும் இயக்குநருமான தனுஷின் மூத்த மகன் யாத்ரா அறிமுகமாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக சினிமா சூழலில் வளர்ந்து வந்த யாத்ரா, தற்போது கதாநாயகனாக வெள்ளித்திரையில் களம் இறங்க தயாராகி வருகிறார். இந்த திரைப்படத்தை தனுஷே இயக்கவுள்ளதாக கூறப்படுவது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.


ஏற்கனவே தனுஷ் இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் யாத்ரா கேமரா கையாளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதுமட்டுமல்லாமல், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் பாடலில் சில வரிகளை எழுதி தனது படைப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருந்தார். இதன் மூலம் சினிமாவின் பல்வேறு துறைகளில் அவருக்கு ஆர்வம் இருப்பது தெரியவந்தது.

தற்போது நடிப்பு, நடனம், உடற்கல்வி உள்ளிட்ட துறைகளில் தீவிர பயிற்சிகளை முடித்துள்ள யாத்ரா, முழுமையான ஹீரோவாக அறிமுகமாக தயாராகியுள்ளார். அவரது முதல் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் மாஸ் கமர்சியல் என்டர்டெய்னராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement