• Jan 18 2025

வீடியோ காலில் நடந்து முடிந்த தனுஷின் எங்கேஜ்மென்ட்.. ஆனந்த தாண்டவத்தில் நெப்போலியன்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி மிரட்டும் வில்லனாகவும் படங்களின் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் அரசியலிலும் தலைசிறந்து காணப்படுகின்றார்.

எனினும் நெப்போலியனின் மூத்த மகனுக்கு உடல்நிலை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான தனுஷிற்கு சிறுவயதில் இருக்கும்போது தசை சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மனம் தளராமல் சிறு வயது முதலே அவருக்கு பாரம்பரிய முறையில் இருந்து பல சிகிச்சைகளை செய்து வந்துள்ளார் நெப்போலியன்.


தற்போது அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி மகனின் சிகிச்சையை தொடர்ந்து வருவதோடு சொந்தமாக பிசினஸையும் கவனித்து அமெரிக்காவில் விவசாயத்தையும் ஊக்குவித்து  வருகின்றார் நெப்போலியன்.


இந்த நிலையில், நெப்போலியனின் மூத்த மகனான தனுஷிற்கு நிச்சயதார்த்தம் வீடியோ காலில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

தனுஷ் விமானத்தில் அதிகமாக பயணிக்க முடியாது என்பதால் அவர் அமெரிக்காவில் இருக்க, நெப்போலியன் தனது குடும்பத்தோடு இந்தியா வந்துள்ளார்.

மேலும் நெப்போலியனின் மருமகள் அக்ஷயா திருநெல்வேலியை சேர்ந்தவர் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகிறது. தனுஷிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement