• Apr 15 2026

கேப்டன் மில்லர் தனுஷ் போல வேடமிட்டு வந்த தனுஷ் வெறியன்... துப்பாக்கியோடு திரியேட்டர் முன் ஆரவாரம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'கேப்டன் மில்லர்'. இத்திரைப்படத்திற்க்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார், இப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் தனுஷ் உடன் ஜோடி சேர்ந்துள்ளார்.


இத் திரைப்படம் இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் விமர்சனகளும் அதிகரித்து விட்டது. படத்தினை பார்த்த அனைவரும் அருமையான படம், அனைவரும் பார்க்கலாம், என பல நல்ல விமர்சனங்களை  சொல்லுகின்றனர். அதையும் தாண்டி தனுஷ் வெறியன் ஒருவரின் செயல் தான் எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது.


கேப்டன் மில்லர் படத்தில்  தனுஷ் கதாபாத்திரத்தில் எப்பிடி காட்சியளித்தாரோ அதே போல் அந்த ரசிகரும் கேப்டன் மில்லர் போல் ஆடை அணிந்து , துப்பாக்கி கையில் வைத்து கொண்டு கேப்டன் மில்லர்  என்று உரத்த சத்தமாக திரையரங்கு முன்பதாக கத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பரவி கொண்டு இருக்கிறது.  


துப்பாக்கியை மேலே தூக்கியவாறு தலைவா தலைவா என்றும் கூச்சலிட்டுள்ளார் . கேப்டன் மில்லர் பெயரை கேட்டால் அப்பிடியே எல்லாம் மிரண்டு போயிரும். இவ்வாறு சத்தம் போட்டு தனுஷ் வெறியன் என்பதை காட்டியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது . 


மற்றும் ஏனைய ரசிகர்கள் படம் வேற லெவல் என்றும் , எங்க தலைவர் படம் எப்ப வந்தாலும் எப்பிடி வந்தாலும் நாங்க பார்ப்போம் அவர் கெத்து , அயலான் படத்தோட எங்க தலைவர் கேப்டன் மில்லர் படத்தை காம்பர் பண்ண வேணாம் என்றும் ரசிகர்கள் கொந்தளித்தனர். எங்க தலைவர் வளர்த்து விட தான் பார்பார் ,யாரையும் இறக்கி விடனும் என்று நினைக்க மாட்டாரு , இவ்வாறு தனுஷ்யை விட்டு கொடுக்காமல் ரசிகர்கள் கதைத்தனர்.

Advertisement

Advertisement