• Apr 15 2026

மன்னிப்பு கேட்கும் நிக்சன்... மன்னிக்க மறுக்கும் வினுஷா... பரபரப்பாக வெளியானது BIGG BOSS PROMO-2

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது. பரபரப்பாக வெளியாகிய இந்த ப்ரோமோவில் என்ன இருக்கிறது என பார்ப்போம் வாங்க.


பிக் பாஸ் 7நில் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது வந்துள்ள நிலையில் நிக்சன் மற்றும் விஜய் வருகை தந்துள்ளனர். அவர்களை போட்டியாளர்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். இந்நிலையில் நிக்சன் மற்றும் வினுஷா இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.


அதில் நிக்சன் "ஐஷு கிட்ட அந்த விடயம் பேசும் போது எனக்கு தப்பு என்று தோணவில்லை, அதை வைத்து உள்ளே ஒன்று பேசினார்கள், வெளியே வச்சி செஞ்சிட்டாங்க, எனக்கு உங்க கிட்ட சாரி கேக்கணும் என்று மட்டும் தான் தோணிச்சி சொரி" என்று கூறுகிறார். 


அதற்கு வினுஷா "நீ பேசுனது தப்புனு உனக்கே தெரிஞ்சிருச்சி, உனக்கே தெரியுது நீ பேசுனது தப்புன்னு, நீ சரியா புரிஞ்சிக்கல, அப்டி பேசுனனால நான் ஹர்ட் ஆகி இருக்கேன் அப்டினு நீ சாரி கேட்டா அத ஏற்றுகொள்ள முடியாது" என்று கூறுகிறார். அதற்கு நிக்சன் நீங்க மறுபடி மறுபடி சொல்லி காட்டுறிங்க என்று கூறுகிறார் அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.  


Advertisement

Advertisement