• Jan 18 2025

அதிரடியாக கேப்டன் மில்லர் ரிலீஸ்... படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் இன்று பிரமாண்டமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் அவர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான கவல் கிடைக்க பெற்றுள்ளது.


1930 -40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளும் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெளிநாடுகளில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இப்படத்திற்காக தனுஷ் ரூபாய் 20 கோடி வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement