• Jan 19 2025

மறைந்த முக்கிய பிரபலங்கள்... தமிழ் சினிமா இழந்த பொக்கிஷங்கள் ஒரே பார்வையில்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா திரையுலகில்  2023ஆம் ஆண்டில் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் கூட எதிர்பாராத சம்பவங்களும் நடந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல முன்னணி நடிகர்களை இந்த ஆண்டு சினிமா திரையுலகம் இழந்துள்ளது. 


இழந்த நட்சத்திரங்கள் ஒரே தொகுப்பில் பார்ப்போம். திரையுகில் நகைச்சுவை மன்னனாகவும், சமகால வாழ்க்கையில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வள்ளலாகவும் வாழ்ந்து வந்தவர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.


இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் மனோபாலா. இவர் கடந்த மே 3ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக நம்மைவிட்டு பிரிந்து சென்றார்.வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என கலக்கி கொண்டு இருந்தவர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பி வந்த மாரிமுத்து கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்தார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடிய பின்னணி பாடகி வாணி ஜெயராம். இவர் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடைத்ததாக அதிர்ச்சி செய்தி வெளிவந்தது. பின் தான் தெரியவந்தது, கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டதால் தான் இறந்தார் என்றனர்.


பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஜூனியர் பாலையா கடந்த நவம்பர் 2ஆம் தேதி மறைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மூச்சி திணறல் காரணமாக தான் இவர் இறந்தார். தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றி புகழை சம்பாதித்த டி. பி. கஜேந்திரன் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மறைந்தார்.


தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஆர்.எஸ். சிவாஜி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். எந்த ஒரு கதாபாத்திரத்திலும் ஜொலிக்க கூடிய நட்சத்திரங்களில் ஒருவர் தான் சரத்பரபு. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால், உடல் உறுப்புகள் செயல் இழந்து போனதன் காரணமாக கடந்த மே 22ஆம் தேதி மறைந்தார்.


இப்படி பல நல்ல படங்களை தந்த இன்னும் பல முன்னணி  பிரபலங்களை இழந்துள்ளது தமிழ் சினிமா திரையுலகம். 


Advertisement

Advertisement