• Dec 04 2023

'பிக்பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக கிளம்பிய போட்டியாளர்கள்' கேப்டன் தினேஷ் முடிவால் பரபரப்பு

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ்  சீசன் 7 நிகழ்ச்சியில் ஸ்மால் பாஸ் ஹவுஸ் என்ற ஒரு புதிய வீடொன்று காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த வார கேப்டன் தினேஷ் ஆறு போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்கு அனுப்பி உள்ளார். 

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் கூட்டணியாக இருந்தவர்களை பிரிக்க ஒரு ப்ளான் போட்டார். அந்த வகையில், விஷ்ணு, ஜோவிகா, விக்ரம், ப்ராவோ, பூர்ணிமா, விசித்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து, உடனடியாக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லுமாறு பிக்பாஸ் உத்தரவிட்டார். 

மேலும், இந்த 50 நாட்களில் பூர்ணிமா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும்  எதுவுமே செய்யவில்லை, குறிப்பாக பூர்ணிமா கேலி கிண்டல் மற்றும் வதந்தி ஆகியவை மட்டுமே செய்துள்ளதாக தினேஷ் கூறியுள்ளார்.


இதனை அடுத்து இந்த 50 நாட்களில் எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டதாகவும் இனிமேல் அவர்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என்று என்ற எண்ணத்தில் ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்கு அனுப்புவதாக விஷ்ணு மற்றும் விசித்ராவை தினேஷ் கூறினார்.

இந்த 50 நாட்களாக ஒரு முகமூடி ஆகவே இருந்துவிட்டு தன்னுடைய ஒரிஜினல் முகத்தை இன்னும் காட்டாமல் இருக்கிறார் என்று பிராவோ மற்றும் ஜோவிகாவை கூறுவதாக தினேஷ் கூறினார்

ஆக மொத்தம் இந்த வாரம் விக்ரம், பூர்ணிமா, விஷ்ணு, விசித்ரா, பிராவோ மற்றும் ஜோவிகா ஆகிய ஆறு பெயர்களை ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்கு அனுப்புவதாக தினேஷ் கூறியுள்ளதை அடுத்து ஆறு பேரும் ஸ்மால் ஹவுஸ் சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement