• Jan 19 2025

யாரையும் நம்ப முடியவில்லை; என்னை பின் தொடர வேண்டாம்..! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த பிரதீப்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு தற்போது பெரும் ரசிகர் வட்டாரமே உண்டு. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் யாரையும் நண்பர்களாக இணைத்துக் கொள்ள முடியவில்லை என திடீரென சொல்லியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டிலுள்ள பெண்களுக்கு  பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டப்பட்டு அவர்  வெளியே அனுப்பட்டார்.

இவ்வாறு வெளியே வந்த பிரதீப்க்கு ஆதரவாக பலர் தமது குரல்களை எழுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்ட பிரதீப்க்கு வாய்ப்பு வழங்க மறுத்தது பிக் பாஸ்.


இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரையும் நண்பர்களாக வைத்து இருக்க நான் விரும்பவில்லை என பிரதீப் கூறி உள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு....

'எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு யாரும் நண்பர் கோரிக்கைகளை அனுப்ப வேண்டாம். எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட இடமாக இதை  பார்க்கின்றேன். அதற்காக உங்களை என் நண்பராக கருதவில்லை என்பதல்ல. தற்போதைய சூழலில் யாரையும் நம்பி என் வாழ்க்கையில் அனுமதிக்கும் இடத்தில் நான் இல்லை என்பதே ஆகும்.

மேலும், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்கள் உள்ளன. சமூக ஊடகங்கள் நேர்மறை மற்றும் எதிர்மறைகளின் கலவையாக இருப்பதாக நான் உணர்கிறேன். எனக்கு வரும் விமர்சனத்தை நான் நன்றாக எடுத்துக்  கொள்வேன். ஆனால் இதன் மூலம் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் தனியுரிமை தாக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

அதேவேளை, எனது ட்விட்டரில் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் எனது வாழ்க்கையின் பகுதியை பகிர்ந்து கொள்கிறேன்,  எனினும் சில விஷயங்களை நான் மிகவும் நெருங்கியவர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என் நிலைமை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்' என தனது நிலைமையை ரசிகர்களுக்கு எடுத்து சொல்லியுள்ளார் பிரதீப்...


Advertisement

Advertisement